மதுரா கிருஷ்ண ஜன்ம பூமியை மீட்க கோரிய மனு தள்ளுபடி.!

இந்தியா

மதுரா கிருஷ்ண ஜன்ம பூமியை மீட்க கோரிய மனு தள்ளுபடி.!

மதுரா கிருஷ்ண ஜன்ம பூமியை  மீட்க கோரிய மனு தள்ளுபடி.!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் ஹரிசங்கர், விஷ்ணு ஜெயின் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

அயோத்தியை ராம ஜன்ம பூமியாகவும், மதுராவை கிருஷ்ண ஜன்மபூமியாகவும், ஹிந்துக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக கருதி வருகின்றனர். மதுராவின் ஒவ்வொரு அங்குல நிலமும், ஹிந்துக்களுக்கு புனிதமானது. இங்கு, 13.37 ஏக்கர் நிலத்தில், கேசவ் தேவ் கோவில் அமைந்து உள்ளது.

நாட்டில் முகலாயர் ஆட்சி நடந்த போது, பல ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டன. அப்போது, மதுராவில் கேசவ் தேவ் கோவிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. அங்கு ஒரு கட்டடத்தை கட்டி, அதற்கு ஈத்கா மசூதி என, பெயரும் வைத்தனர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்த மசூதியை அகற்றிவிட்டு, கிருஷ்ண ஜன்ம பூமியை முழுமையாக மீட்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

இந்த மனு, மதுரா சிவில் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆக., 15, 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இருந்த வழிப்பாட்டு தலங்கள் அனைத்தும் அதேநிலையில் நீடிக்கும் என்ற ‘மதவழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991’ சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இவ்வழக்கை விசாரணை செய்ய முகாந்திரம் இல்லை எனக்கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

Leave your comments here...