குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் பிரச்சார வாகனத்தை, மாவட்ட நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.!

சமூக நலன்தமிழகம்

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் பிரச்சார வாகனத்தை, மாவட்ட நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.!

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் பிரச்சார வாகனத்தை, மாவட்ட நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.!

திருவில்லிபுத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் பிரச்சார வாகனத்தை, மாவட்ட நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை, சட்டப்பணி ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி முத்துசாரதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முன்னதாக சட்டப்பணி ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி மாரியப்பன் வரவேற்றார். நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய – மாநில அரசுகள் பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டு வந்தும், புதிய சட்டங்களை இயற்றியும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டித்து வருகிறது. இருப்பினும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

இதை தடுக்கும் விதமாக பல்வேறு பிரச்சார இயக்கங்கள் நாடு முழுவதும் இயங்கி வருகிறது. திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட நீதிபதிகள் பங்கேற்ற பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெண்கள் சமூகத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை எளிதாக விளக்கும் பாடல்கள் அடங்கிய பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நீதிபதி பேசும் போது, குழந்தை திருமணம் உள்ளிட்ட இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மட்டுமல்லாது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களும் குற்றவாளியாகவே கருதப்படுவர் என்று பேசினார். நிகழ்ச்சியில் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி சுமதிசாய்பிரியா, குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு அமர்வு நீதிபதி பரிமளா, விரைவு மகளிர் நீதிமன்ற அமர்வு நீதிபதி காஞ்சனா, நிரந்தர மக்கள்நீதிமன்ற தலைவர் மற்றும் அமர்வு நீதிபதி ஸ்ரீதரன், கூடுதல் சார்பு நீதிபதி சுந்தரி, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆனந்தி, விரைவு நீதிமன்ற குற்றவியல் நீதித்துறை நடுவர் சந்திரபிரகாசபூபதி, நீதித்துறை நடுவர் பரம்வீர், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி சிவராஜேஷ் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். தலைமை குற்றவியல் நீதிபதி கதிரவன் நன்றி கூறினார்.

Leave your comments here...