சதுரகிரிமலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி : பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை.!

ஆன்மிகம்

சதுரகிரிமலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி : பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை.!

சதுரகிரிமலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி : பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை.!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு மலைத்தொடர்ச்சி மலையில் உள்ளது சதுரகிரிமலை. மலை மேல் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு, பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை தினங்களுக்கு மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, மகாலிங்க சுவாமி தரிசனத்திற்காக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்வதற்கு வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இன்றிலிருந்து பௌர்ணமி வரை தொடர்ச்சியாக, 4 நாட்கள் பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்லலாம். திடீரென்று மழை பெய்தால், பக்தர்கள் மலைக்கு மேலே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதிகாரிகள் கூறினர்.

மேலும் கோவிலுக்குச் செல்லும் அனைவரும், உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே மலைக்குச் செல்ல முடியும் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.

Leave your comments here...