நமாமி கங்கை திட்டத்தின் கீழ் 6 மெகா திட்டங்களை துவக்கி வைத்தார்- பிரதமர் மோடி

இந்தியா

நமாமி கங்கை திட்டத்தின் கீழ் 6 மெகா திட்டங்களை துவக்கி வைத்தார்- பிரதமர் மோடி

நமாமி கங்கை திட்டத்தின் கீழ் 6 மெகா திட்டங்களை துவக்கி வைத்தார்- பிரதமர் மோடி

உத்தர்கண்ட் மாநிலத்தில் நமாமி கங்கை இயக்கத்தின் கீழ் 6 திட்டங்களை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்த பிரதமர் மோடி, ஜல்ஜீவன் இயக்கத்தின் லோகோவையும் அறிமுகம் செய்தார்.

ஒரு நாளைக்கு 26 மில்லியன் லிட்டர்கள் (MLD) கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம் கட்டுவது, ஹரித்துவார் ஜெக்தீப்பூரில் உள்ள ஒரு நாளைக்கு 27 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்தை மேம்படுத்துதல், சாரை என்னுமிடத்தில் 18 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடக் கட்டுமானம் உள்ளிட்டவை இத்திட்டங்களில் அடங்கும்.

பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ள 68 எம்எல்டி ஜெக்தீப்பூர் திட்டம், பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது கழிவுநீர்த் திட்டமாக அமைந்துள்ளது. ரிஷிகேசில், லக்காத்கட்டில் ஒரு நாளைக்கு 26 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடம் தொடங்கப்பட உள்ளது. ஹரித்துவார் – ரிஷிகேஷ் மண்டலத்தில் 80 சதவீதக் கழிவு நீர் கங்கை நதியில் விடப்படுகிறது. எனவே, இந்த கழிவுநீர் சுத்திகரிப்புக் கூடங்கள் தொடங்கப்படுவது, கங்கை நதியைத் தூய்மையாக வைத்திருப்பதில் முக்கியமான பங்காற்றும் என அரசு தெரிவித்துள்ளது.


இதன் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:- கடந்த பல ஆண்டுகளாக, கங்கை நதியை தூய்மைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், அதில், பொது மக்கள் பங்களிப்பு இல்லாதது மற்றும் தொலைநோக்கு பார்வை ஏதும் இல்லை. இதனால், அந்த திட்டங்கள் தோல்வியடைந்தன.விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சுகாதாரம் தொடர்புடைய பல்வேறு சீர்திருத்தங்கள், சமீபத்தில் முடிவடைந்த பார்லிமென்ட் தொடரில் நிறைவேற்றப்பட்டன. இந்த சீர்திருத்தங்கள், நமது நாட்டின் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரை பலப்படுத்தும். ஆனால், சிலர் இதனை சொந்த நலனுக்காக எதிர்த்து வருவதை நாட்டு மக்கள் பார்த்து வருகின்றனர்.தற்போது விவசாயிகள், தங்களது விளை பொருளை எங்குவேண்டுமானாலும், எப்போது வேண்டுமானலும் விற்று கொள்ளலாம்.


விவசாயிகளுக்கு அவர்களது உரிமையை வழங்கும்போது, அதனை சிலர் எதிர்க்கின்றனர். விவசாயிகள், தங்களது சொந்த பொருட்களை திறந்த சந்தையில் விற்பனை செய்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இடைத்தரகர்கள் லாபம் பெறுவதை மட்டுமே விரும்புகின்றனர். விவசாயிகள் சுதந்திரம் பெறுவதை எதிர்க்கின்றனர்.விவசாயிகள் வழிபடும், இயந்திரங்கள் மற்றும் சாதனங்களுக்கு தீ வைத்து, அவர்களை இழிவுபடுத்துகின்றனர். பல ஆண்டுகளாக, குறைந்தபட்ச ஆதார விலை அமல்படுத்தப்படும் எனக்கூறினர். ஆனால் , அவர்கள் அதனை செய்யவில்லை. சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி, எங்களது அரசு அதனை செய்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave your comments here...