பா.ஜ.க பெயரை அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்த வேண்டாம் – தொண்டர்களுக்கு அறிவுரை

அரசியல்

பா.ஜ.க பெயரை அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்த வேண்டாம் – தொண்டர்களுக்கு அறிவுரை

பா.ஜ.க பெயரை அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்த வேண்டாம் – தொண்டர்களுக்கு அறிவுரை

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடக்கிறது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்பும், துணை அதிபருக்கு மைக் பென்ஸ் போட்டியிடுகின்றனர். ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஜோ பிடனும், துணை அதிபருக்கு கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். இருக்கட்சி தரப்பிலும், இந்திய வம்சாவளியினரின் ஓட்டுகளை கவர பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன. குடியரசு கட்சி பிரசார கூட்டங்களில், பிரதமர் மோடியும், டிரம்பும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் சந்தித்துக்கொண்ட நிகழ்வுகளின் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என அங்குள்ள பா.ஜனதா தொண்டர்களுக்கு கட்சி அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து கட்சியின் வெளிநாட்டு உறவுகள் துறை தலைவர் விஜய் சவுதைவாலே பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘எந்த தேர்தல் நடைமுறையும் ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம் ஆகும். அதில் எந்தவகையிலும் பா.ஜனதாவின் பங்களிப்பு இல்லை’ என்று தெரிவித்தார்.

அந்தவகையில், பா.ஜனதாவின் அமெரிக்க தொண்டர்கள் ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சியையோ அல்லது நபரையோ ஆதரித்து நடைபெறும் பிரசாரங்களில் தனிப்பட்ட முறையில் பங்கேற்கலாம் எனவும், ஆனால் பா.ஜனதாவையோ அல்லது கட்சியின் வெளிநாட்டு பிரிவின் பெயரையோ பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave your comments here...