மதுரையில் 12வது முறையாக பத்தாயிரம் நிவாரண நிதி வழங்கும் முதியவர்:

சமூக நலன்தமிழகம்

மதுரையில் 12வது முறையாக பத்தாயிரம் நிவாரண நிதி வழங்கும் முதியவர்:

மதுரையில் 12வது முறையாக பத்தாயிரம் நிவாரண நிதி வழங்கும் முதியவர்:

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பனிரெண்டாவது தடவையும் ரூ. 10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன்.

இவர், மதுரை மாட்டுத் தாவணி, பூ மார்க்கெட்டு பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் யாசகம் பெறுவது வழக்கம்.இவ்வாறு, பெறும் யாசகப் பணத்தில் சாப்பாட்டு செலவு போக மீதி பணத்தை சேமித்து பல்வேறு நல்லப் பணிகளை செய்து வருகிறார் . பூல்
பாண்டியன்.

இவர், ஏற்கெனவே தாம் யாசகம் பெற்ற பணத்தில் ரூ. 10 ஆயிரம் வீதம் பதினொரு தடவை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி, நற்சான்றிதழை பெற்றுள்ளார்.இந்த நிலையில், இன்று 12 வது தடவையாக ரூ. 10 ஆயிரத்தை கொரோனா நிதிக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.

Leave your comments here...