கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடி ஒதுக்கீடு : தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு

இந்தியா

கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் விதமாக மத்திய நிதி அமைச்சகம் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக, கேரளாவுக்கு ரூ.1,27,691.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு நிதி அமைச்சகம், ரூ. 6,195 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. பஞ்சாப்புக்கு ரூ.638.25 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ.417.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 335.41 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலத்திற்கு 49141.66 கோடியும், அசாம் மாநிலத்துக்கு 63158.33 கோடியும், ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்துக்கு 95258.33 கோடியும், மணிப்பூா் மாநிலத்துக்கு 23533.33 கோடியும், மிசோரம் மாநிலத்துக்கு 11850 கோடியும், நாகலாந்து மாறிலத்துக்கு 32641 கோடியும், திருபுரா மாநிலத்துக்கு 26966.66 கோடியும், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 41775 கோடி நிதியை மத்திய நிதித்துறை அமைச்சகம் ஓதுக்கீடு செய்துள்ளது.

கொரோனா நெருக்கடியில் இருக்கும் மாநில அரசுகளுக்கு உதவும் வகையில், 15வது நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி, 2வது தவணையாக 14 மாநிலங்களுக்கு ரூ.6,195. கோடி வழங்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...