ஈட்டி, கம்புகளுடன், இந்திய பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்த சீன வீரர்கள் – வெளியானது புகைப்படம்..!

இந்தியா

ஈட்டி, கம்புகளுடன், இந்திய பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்த சீன வீரர்கள் – வெளியானது புகைப்படம்..!

ஈட்டி, கம்புகளுடன், இந்திய பகுதிகளுக்குள் அத்துமீறி  நுழைந்த  சீன வீரர்கள் – வெளியானது புகைப்படம்..!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப்பிரச்சினை நீடித்து வருகிறது. இதன் இடையே கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீற முயன்ற சீன துருப்புகளை இந்திய படைவீரர்கள் தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர். சீன தரப்பில் 30 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

அதைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், கடந்த 29-ந் தேதி கிழக்கு லடாக் பகுதியில் பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன துருப்புகள் அத்துமீற முயன்றபோது, இந்திய வீரர்கள் அதை முறியடித்தனர். அதைத் தொடர்ந்து இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு ஏற்படாமல் போர் பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் கிழக்கு லடாக் எல்லையான பாங்கோங் த்சோ ஏரி பகுதியில், இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பதாக சீன ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. படைகளை விலக்கிக் கொள்ள இருதரப்பினரும் முன்வந்தபோது, இந்திய ராணுவம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், இதுபோன்ற ஆபத்தான நகர்வுகளில் இந்தியா ஈடுபடக் கூடாது எனவும் சீனா தெரிவித்தது. இதையொட்டி, இந்திய ராணுவம் மறுத்துள்ளதுடன், சீன ராணுவம் தான் அத்துமீறியதாகவும், வானத்தை நோக்கி சுட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீன ராணுவ வீரர்கள் கைகளில் ஈட்டிகளுடன் இந்திய எல்லையை நோக்கி முன்னேறி வரும் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. சாட்டிலைட் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், கிழக்கு லடாக் பகுதிகளில், சீன வீரர்கள், கைகளில் ஈட்டி போன்ற கூரிய ஆயுதங்களுடனும், கம்புகளுடனும், துப்பாக்கிகளுடனும் அணிவகுத்து நிற்கின்றனர்.

Leave your comments here...