‘5ஜி’ தொழில்நுட்பத்தில், இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து செயலாற்ற ஒப்பந்தம்

உலகம்

‘5ஜி’ தொழில்நுட்பத்தில், இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து செயலாற்ற ஒப்பந்தம்

‘5ஜி’ தொழில்நுட்பத்தில், இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து செயலாற்ற ஒப்பந்தம்

புதிய தொழில்நுட்பம், நீர், வளர்ச்சி வாய்ப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது தொடர்பாக, இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இது குறித்து, அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு துறையின் துணை நிர்வாகி, போனி கிளிக் கூறியதாவது: அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைகளில், அடுத்த தலைமுறைகளுக்கான தொழில்நுட்பத்தில், இந்தியா, இஸ்ரேலுடன், அமெரிக்கா இணைந்து செயல்படும். குறிப்பாக, அதிவேக தகவல் தொடர்பு வசதிக்கான, ‘5ஜி’ தொழில்நுட்பத்தில், மூன்று நாடுகளும் இணைந்து செயலாற்றும்.

சர்வதேச வளர்ச்சிக்கு சவாலாக உள்ள தொழில்நுட்பங்களில், மூன்று நாடுகளும் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.அமெரிக்காவின் சிலிக்கான் வேலி, இந்தியாவின் பெங்களூரு, இஸ்ரேலின், டெல் அவிவ் நகரங்கள், புதுமையான தொழில்நுட்பங்களின் மையங்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளன. மூன்று நாடுகளின் கூட்டணி, இதற்கு மேலும் வலு சேர்க்கும். அதிவேக தகவல் தொடர்புக்கான, 5ஜி தொழில்நுட்பத்தில், எந்த நாடும் ஆதிக்கம் செலுத்தவோ அல்லது இந்த தொழில்நுட்பம் மூலம் பிற நாடுகளை கட்டுப்படுத்தவோ, எங்கள் கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது. ஏற்கனவே, மூன்று நாடுகளும், ராணுவ துறையில் கூட்டாக செயல்பட்டு வருகின்றன. இது, 5ஜி உள்ளிட்ட, புதிய தொழில்நுட்பத்திலும் தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave your comments here...