ரூ.110 கோடி மோசடி ; பிரதமரின் கிஷான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது – ககன்தீப் சிங்

தமிழகம்

ரூ.110 கோடி மோசடி ; பிரதமரின் கிஷான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது – ககன்தீப் சிங்

ரூ.110 கோடி மோசடி ;  பிரதமரின் கிஷான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது – ககன்தீப் சிங்

பிரதமர் கிசான் வேளாண் திட்டத்தில் முறைகேடு விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இத்திட்டதின் மூலம் விவசாயிகள் அல்லாதோர் பயனாளர்களாக பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

அந்த வகையில் போலி பயனாளர்கள் கணக்கு தொடங்கி உதவி தொகை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்பான விசாரணையும் வேகமெடுத்துள்ளது. திருவண்ணாமலை, கடலூர், மதுரை உளிட்ட மாவட்டங்களில் எழுந்த முறைகேடு புகார்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:- பிரதமரின் உதவித்தொகை திட்டத்தில் முறைகேடாக உதவி பெற்றவர்களிடம் ரூ.32 கோடி திரும்ப பெறப்பட்டுள்ளது. முறைகேடாக பெற்ற பணத்தை திரும்ப பெற முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முறைகேடு சம்பவத்தில் 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளி தனி நபராக இருந்தாலும், அரசு அதிகாரியாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேட்டில் யாரும் தப்ப முடியாது. மோசடி செய்யப்பட்ட முழுப்பணமும் திரும்ப பெறப்படும். முதல்வரின் உத்தரவின் பேரில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் பிரதமரின் உதவித்திட்டத்தின் கீழ் ரூ.110 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. உண்மையான விவசாயி ஒருவருக்கு கூட பாதிப்பு வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். அடுத்த தவணை தொகை செலுத்தப்படுவதற்கு முன் முறைகேடுகள் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...