தன்னார்வலருக்கு உடல்நலக்குறைவு : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம்

உலகம்

தன்னார்வலருக்கு உடல்நலக்குறைவு : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம்

தன்னார்வலருக்கு  உடல்நலக்குறைவு : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம்

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இன்னும் கூட ஓய்ந்த பாடில்லை. ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியுள்ள கொரோனா தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. ஆனாலும் கொரோனாவுக்கு எதிரான போரில் அதை தடுப்பதற்கான எந்த தடுப்பூசியும் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை. அதற்கான பணிகளில் உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பல்வேறுகட்ட ஆய்வுக்குப் பிறகு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து இந்த மருந்தை தயாரித்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் முதல் 2 கட்ட பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற்றது.

இந்நிலையில், 3ம் கட்ட பரிசோதனையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை மதிப்பாய்வு செய்ய வேண்டி உள்ளதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‘மருந்து சோதனைகளில் விவரிக்கப்படாத நோய் ஏற்படும்போதெல்லாம் இதுபோன்று பரிசோதனை நிறுத்தி வைப்பது வழக்கமான நடைமுறைதான். தீவிரமாக ஆராய்ந்து, சோதனைகளின் நேர்மையை பராமரிப்பதை உறுதிசெய்கிறோம். மிகப்பெரிய அளவில் சோதனைகள் செய்யப்படும்போது, சில சமயம் நோய்கள் தற்செயலாக ஏற்படும். ஆனால் அவை சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்’ என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

எனினும், உடல்நலக்குறைவு ஏற்பட்ட தன்னார்வலர் எங்கு உள்ளார். எத்தகைய உடல் நலப்பிரச்சினை ஏற்பட்டது என்பன போன்ற எந்த தெளிவான விவரங்களும் வெளியிடப்படவில்லை.

Leave your comments here...