சாத்தூர் அருகே பட்டாசுக் கடையில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் விபத்தில் வெடித்து சேதம்.!

சமூக நலன்தமிழகம்

சாத்தூர் அருகே பட்டாசுக் கடையில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் விபத்தில் வெடித்து சேதம்.!

சாத்தூர் அருகே பட்டாசுக் கடையில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் விபத்தில் வெடித்து சேதம்.!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு பட்டாசுக் கடையில் தீ விபத்து ஏற்பட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சேதமானது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் சாத்தூர் அருகே கோவில்பட்டி சாலையில், சுஜாதா டிரேடர்ஸ் என்ற பெயரில், பட்டாசு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகை வியாபாரத்திற்காக கடையில் பட்டாசுகள் வாங்கி வைத்திருக்கிறார். நேற்று நள்ளிரவு இந்த பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு, கடையிலிருந்த பட்டாசுகள் வெடிக்கத் துவங்கின. இது குறித்து சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி கதிரேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டேயிருந்ததால், கோவில்பட்டி தீயணைப்புத்துறை வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த விபத்தில் கடையிலிருந்த பல லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் முற்றிலும் எரிந்து, வெடித்து சேதமானது. விபத்து நடந்த இடத்தில் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் கணேசன் நேரில் ஆய்வு செய்தார். நள்ளிரவு நேரத்தில் விபத்து நடந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து சாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...