காஷ்மீரில் உள்ள 10 ஆயிரம் துணை ராணுவ படையினரை உடனடியாக திரும்ப பெற உள்துறை அமைச்சகம் உத்தரவு..!
![காஷ்மீரில் உள்ள 10 ஆயிரம் துணை ராணுவ படையினரை உடனடியாக திரும்ப பெற உள்துறை அமைச்சகம் உத்தரவு..!](https://www.jananesan.com/wp-content/uploads/2020/08/காஷ்மீரில்-பாதுகாப்பு-பணி.jpg)
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி வாபஸ் பெறப்பட்டது. ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதற்கு முன்பாக காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் சி.ஆர்.பி.எப். ,மத்திய ஆயுதப்படை போலீசார், மத்திய கம்பெனிகள் பாதுகாப்புபடை, எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் , துணை ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், காஷ்மீரில் தற்போதைய கள நிலவரத்தை ஆய்வு செய்யும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 10 ஆயிரம் துணை ராணுவ படை வீரர்களை திரும்ப அழைக்க உத்தரவிடப்பட்டது.மத்திய ரிசர்வ் படையினர், எல்லை பாதுகாப்பு படையினர், மத்திய தொழிற்படையினர் உள்பட சுமார் 10 ஆயிரம் வீரர்களை வாபஸ் பெறும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வர உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Leave your comments here...