2ம் தலைநகர் குறித்து முதல்வர், துணை முதல்வர் முடுவெடுப்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜூ

அரசியல்தமிழகம்

2ம் தலைநகர் குறித்து முதல்வர், துணை முதல்வர் முடுவெடுப்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜூ

2ம் தலைநகர் குறித்து முதல்வர், துணை முதல்வர்  முடுவெடுப்பார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை தமுக்கம் மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 45.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய அதிநவீன கூட்ட அரங்க கட்டிட பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்த

பின்னர் பேட்டியளித்தார்:- மதுரைக்கு முன்னாள் இருந்த அரசு கிள்ளிக்கூட கொடுக்கவில்லை தற்போதைய அரசு அள்ளி அள்ளி கொடுக்கிறது. தமுக்கம் மைதானத்தில் கலாச்சார மையம் அமைக்கப்பட்டு வருகிறது. 3500 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறும் வகையில் கலாச்சார மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 6 மாதத்தில் புதுமையான மதுரை மாநகரை பார்க்க்கப்போகிறார்கள். ஸ்மார்ட் சிட்டி பற்றி நான் கூறும்போது என்னை கேலி கிண்டலாக பார்த்தார்கள். 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை தமிழக முதல்வர் 4 ஆண்டுகளில் செய்து சாதனை படைத்துள்ளார்

மதுரையை இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்ற வருவாய்த்துறை அமைச்சரின் கோரிக்கையை நான் முன்மொழிந்துள்ளேன். நான் எப்பொழுதும் மதுரையை முன்னிறுத்தி பேசக்கூடியவன். இரண்டாம் தலைநகர் குறித்து முதல்வர், துணை முதல்வர் முடுவெடுப்பார்கள். புள்ளி வைத்தால் கோலம் போடுபவர், கோடு போட்டால் ரோடு போடுபவர் முதல்வர் என புகழாரம்.

Leave your comments here...