மதுரை விமான நிலையத்தில் 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு – நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த வட மாநில இளைஞர்களால் பரபரப்பு..!

தமிழகம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு விமான நிலையத்திற்குள் செல்கின்றன மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்து கொண்டிருக்கும்பொழுது விமான நிலைய பின்புற வழியாக ஐந்தாவது கேட்டு அருகே வந்த மர்ம கார் வந்தது அதில் முன்புறம் நம்பர் பிளேட் எதுவும் இல்லாமல் இருந்தது.

அந்த காரில் ஆறு பேர் பயணம் செய்து இருந்தனர் அதில் நான்கு பேர் வடமாநிலத்தவர் திருச்சி பதிவு எண் கொண்டதாக உள்ளது காரில் இருந்த ஓட்டுநர் திருச்செந்துரை சேர்ந்தவர் செந்தில் என்பவர் ஓட்டி வந்தார். காரில் வந்தவட மாநில இளைஞர்கள் சென்னை செல்வதால் அழைத்து வந்ததாக கூறினார்.

இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் தொழில் பாதுகாப்பு படையிைனரின் சோதனைக்கு எச்சரிக்கை செய்தபின் விமான நிலையம் உள்ளே செல்ல அனுமதி வழங்கினர்.

Leave your comments here...