திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் வாகனத்தை மறித்து பொதுமக்கள் ஆர்பாட்டம்..!

தமிழகம்

திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் வாகனத்தை மறித்து பொதுமக்கள் ஆர்பாட்டம்..!

திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் வாகனத்தை மறித்து பொதுமக்கள் ஆர்பாட்டம்..!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நகராட்சியில் சில வார்டுகளின் பராமரிப்பு பணிகளை தனியார் நிறுவனம் செய்து வருகிறது.

நகராட்சியின் ஐந்தாவது வார்டில் சுகாதாரப்பணிகள் சரிவர நடக்கவில்லை. வாறுகால் சுத்தப்படுத்துவது, கழிவுநீர் சாக்கடை தூர்வாருவது, குப்பைகள் அள்ளுவது உள்ளிட்ட எந்தப்பணிகளும் முறையாக நடக்கவில்லை என அந்தப்பகுதி மக்கள் பல முறை நகராட்சி அலுவலகத்திற்கு புகார் கொடுக்கச் சென்றால், நகராட்சி அலுவலர்களும், ஊழியர்களும் பொதுமக்களை ஆணையாளரை சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.
வார்டு பகுதியில் சுகாதாரக் கேடாக இருப்பதால் காய்ச்சல், சளி மற்றும் தொற்று நோய் அபாயம் இருப்பதாக அந்தப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலை, தனியார் நிறுவனம் பராமரிக்கும் அனைத்து வார்டு பகுதிகளிலும் கடந்த ஐந்து மாதங்களாக இதே அவலநிலை இருப்பதாக கூறுகின்றனர். இந்த நிலையில் இன்று நகராட்சி அலுவலகத்திலிருந்து ஆணையாளர் வாகனம் வெளியே கிளம்பியபோது, பாதிக்கப்பட்ட ஐந்தாவது வார்டு பொது மக்கள், வாகனத்தின் முன் அமர்ந்து நகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக நகர் காவல்நிலைய போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். நகராட்சி அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், மக்கள் ஆர்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Leave your comments here...