தென்காசி மாவட்டம் தமுமுக அச்சன்புதூர் கிளை சார்பாக கபசுர குடிநீர் வழங்கல்..!

Scroll Down To Discover
Spread the love

உலகம் முழவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு முன்னாள் வக்ப் வாரிய சேர்மன் அண்ணன் ஹைதர் அலி அவர்களின் ஆலோசனையின் படி.. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடிய கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு தமுமுக சார்பாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் அச்சன்புதூர் ரஜாய் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ஜவ்ஹர் அலி, பொருளாளர் பக்கீர் மைதீன், மாநில ஊடகப்பிரிவு துணை செயலாளர் ஆதம் காசியார்,துணை தலைவர் செய்யது மசூது, ஒன்றிய செயலாளர் திவான் ஒலி, துணை செயலாளர்கள் அப்துல் ரஹிம், பாஸித், மனித உரிமை அணி நாகூர் மைதீன், மாணவர் அணி சேக் செய்யது, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக மாநில செயலாளர் நயினார் முகம்மது, அச்சன்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கனகராஜ்,
மாவட்ட தலைவர் கோக்கர்ஜான் ஜமால், ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.மாவட்ட பொருளாளர் செங்கை ஆரிப், மாவட்ட துணை செயலாளர் தென்காசி சலீம் EX.MC, மாநில தொண்டர்அணி துணை செயலாளர் கோகோ அலி, தொண்டர்அணி மாவட்ட துணை செயலாளர் வடகரை இஸ்மாயில் அச்சன்புதூர் கிளை மாலிக், ஜாபர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 600 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் வீடுகளுக்கும் வாங்கி சென்றனர்.இறுதியாக மருத்துவ அணி செயலாளர் சாகுல் ஹமீது நன்றியுரை கூறினார்.