தமிழகம் முழுதும், இன்று எவ்வித தளர்வும் இல்லாத, முழு ஊரடங்கு..!

Scroll Down To Discover
Spread the love

நோய் பரவலை கட்டுப்படுத்த, இம்மாதம் முழுதும், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி, இன்று மாநிலம் முழுதும், எவ்வித தளர்வும் இல்லாத, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இன்று கடைகள் எதுவும் திறக்கப்படாது; வாகனங்கள் செயல்படாது. மருத்துவமனைகள், மருந்து கடைகள் மட்டுமே செயல்படும்.முழு ஊரடங்கால், இன்று, ‘டாஸ்மாக்’ கடைகளுக்கும் விடுமுறை. அதனால், நேற்று அனைத்து மது கடைகளிலும், ‘குடி’மகன்கள் கூட்டம் அலைமோதியதால், மது விற்பனை களைகட்டியது.