தமிழ்நாட்டில் முதல்முறையாக 100 ஆண்டுகள் பழமையான தங்க ஏடு கண்டுபிடிப்பு..!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட கோயிலில் 100 ஆண்டுகள் பழமையான தங்க ஏடு மற்றும் ஓலை சுவடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோழவந்தான் அருகே உள்ளது திருவேடகம் கிராமம்.

இங்கு பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட ஏடகநாதர் ஏலவார் குழலி அம்மன் கோயிலில் இந்த பொக்கிஷம் கிடைத்துள்ளது. திருஞானர் சம்பந்தர் எழுதிய பாடல் அடங்கிய தங்க ஏடு மற்றும் கோயிலின் வரவு, செலவு கணக்குகள் அடங்கிய ஓலை சுவடி ஆகியன கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட திருக்கோயிலில் ஓலை சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது இவற்றை கண்டுபிடித்துள்ளனர். தமிழ்நாட்டில் தங்க ஏடு கண்டறியப்படுவது இதுவே முதல் முறை என்று அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தாமரை பாண்டியன் தெரிவித்துள்ளார்