முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 8 வீதிகளில் உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வந்தது.
மாசித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தொடர்ந்து காலை 7.50 மணிக்கு சுவாமி தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.தேரோட்டத்தை மாலை முரசு நிர்வாக இயக்குநர்கள் இரா.கண்ணன் ஆதித்தன், கதிரேசன் ஆதித்தன் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.தொடர்ந்து, முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தொடர்ந்து காலை 7.50 மணிக்கு சுவாமி தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
11-ம் திருவிழா நாளை இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது.12-ம் திருவிழாவான 4-ந் தேதி (புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு கோலத்துடன் 8 வீதிகளிலும் வலம் வருதல், இரவு 9 மணிக்கு சுவாமி அம்மன் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

Leave your comments here...