இறந்துபோன செல்ல நாய்க்கு கல்லறை – மதுரையைச் சேர்ந்த குடும்பத்தின் கரிசனம்.!

Scroll Down To Discover
Spread the love

தாங்கள் செல்லமாக வளர்த்த நாய் திடீரென்று இறந்து போனதை தாங்கிக் கொள்ளாத மதுரையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று கல்லறை அமைத்து வழிபாடு செய்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பெத்தானியாபுரம் அகஸ்தியர் தெருவை சேர்ந்த வாசகராஜா-விஜயா தம்பதியினர் மணி என்ற நாட்டு இன நாயை கடந்த 5 ஆண்டுகளாக மிகுந்த பிரியத்துடன் வளர்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென நாய் மணி இறந்ததால் அந்த நாய்க்கு முறைப்படி இறுதி மரியாதை செய்ததுடன் நாயின் இறப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வீட்டில் கல்லறை அமைத்து வழிபட்டு வருகின்றனர். இறந்த நாய்க்கு குடும்பத்தினர் கல்லறை அமைத்து வழிபடும் சம்பவம் மதுரையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: Ravi Chandran