ஈ.வெ.ரா-விற்கு தென்னிந்தியாவின் சாக்கரடீஸ் விருது யுனெஸ்கோ வழங்கியதாக மாணவர்களின் படிக்கும் பாடப் புத்தகத்திலிருந்து தவறான வரலாற்றை நீக்கிட அர்ஜூன் சம்பத் கோரிக்கை ..!

தமிழகம்

ஈ.வெ.ரா-விற்கு தென்னிந்தியாவின் சாக்கரடீஸ் விருது யுனெஸ்கோ வழங்கியதாக மாணவர்களின் படிக்கும் பாடப் புத்தகத்திலிருந்து தவறான வரலாற்றை நீக்கிட வேண்டுமென்று தமிழக அரசிற்கு அர்ஜூன் சம்பத் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வெளியீட்டு உள்ள அறிக்கையில்:- தமிழகத்தில் தி.மு.க. தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக பொறுப்பெடுத்துக் கொண்ட பொழுது திரவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்களோடு இணைந்து ஈ.வெ.ரா-வின் ஆதரவை பெறுவதற்காக அரசியல் சூழ்ச்சி செய்தார். யுனெஸ்கோ பெயரையும் முத்திரையையும் பயன் படுத்தி “தெற்காசியாவின் சாக்கரடீஸ்” என்று ஒரு விருதையும் பட்டத்தையும் இவர்களே தயார் செய்து ஒரு கேடயத்தை உருவாக்கி இவர்களே விழா எடுத்து ஈ.வெ.ரா-விற்கு விருது வழங்கியதாக நிகழ்ச்சி நடத்தினர். யுனெஸ்கோவிற்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இப்படி ஒரு விருது வழங்கும் பழக்கம் யுனெஸ்கோவிற்கும் கிடையாது.

ஆனால் தி.மு.க ஆட்சிக் காலத்தில் மாணவர்கள் படிக்கும் பாடதிட்டத்தில் இச்செய்தியை இடம்பெறச் செய்து கடந்த 30 ஆண்டுகாலமாக மாணவர்களும் இந்த பொய்யான வராலாற்றை படித்து வருகிறார்கள்.தெற்காசிய நாடுகளில் இந்தியாவும் கிடையாது. “தெற்காசியாவின் சாக்கரடீஸ்” என்ற விருது ஈ.வெ.ரா-விற்கு யுனெஸ்கோவால் வழங்கப்படவில்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் கடந்த 30 வருடங்களாக போலி வரலாற்றை மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

தி.மு.க-வின் கொள்கைகளும் திரிக்கப்பட்ட வரலாறுகளும் தி.மு.க ஆட்சிகாலத்தில் திட்டமிட்டு மாணவர்களின் படிக்கும் பாட புத்தகத்தில் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. எனவே ஈ.வெ.ரா-விற்கு தென்னிந்தியாவின் சாக்கரடீஸ் விருது யுனெஸ்கோ வழங்கியதாக மாணவர்களின் படிக்கும் பாடப் புத்தகத்திலிருந்து தவறான வரலாற்றை நீக்கிட வேண்டுமென்று தமிழக அரசிற்கு அர்ஜூன் சம்பத் கோரிக்கை வைத்துள்ளார்.

Leave your comments here...