கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி..!

இந்தியா

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி..!

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ்  ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி..!

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, 15 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது.திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயருக்கு வந்த பார்சலில், கடத்தி வரப்பட்ட தங்கத்தை, சுங்கத் துறை அதிகாரிகள், ஜூலை, 5ல், பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில், சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், கே.டி.ரமீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களது கூட்டாளியான பைசல் பரீத் என்பவரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை, இந்தியா கொண்டு வரும் முயற்சியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவ்வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு, சுங்கத் துறை, வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் மீது, சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் கோரி, கொச்சியில் உள்ள, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இம்மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, பொருளாதார குற்றத்தின் கீழ் வரும் இவ்வழக்கில், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ஸ்வப்னா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.அதற்கு, என்.ஐ.ஏ., தரப்பில், பதில் அளிக்கப்பட்டது. அதன் விபரம்:தங்க கடத்தல் வாயிலாக கிடைத்த பணத்தில், பல பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி ரமீஸ் என்பவர், பல பயங்கரவாத அமைப்புகளுடன்,நேரடி தொடர்பில் இருந்துள்ளார். இவர், ஆப்பிரிக்கா உட்பட பல வெளிநாடுகளுக்கு, பலமுறை சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், என்ஐஏ குழு நேற்றிரவு துபாய் சென்றடைந்ததாக தகவல் வெளியாகியது. இந்த விசாரணையில் தொடர்புடைய மூத்த என்ஐஏ அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் இதுபற்றி கூறுகையில், கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த என்ஐஏ குழு நேற்றிரவு துபை சென்றடைந்தது. இந்த வழக்கில் கேரள அதிகாரிகள் யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்பதற்கான ஆதாரங்களைத் திரட்ட உள்ளது. முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் பாசில் பரீத் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நிர்வாகிகள் காவலில் உள்ள மேலும் இருவரிடமும் என்ஐஏ விசாரணை மேற்கொள்ளவுள்ளது என்றார்.

இந்நிலையில் கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கொச்சி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கக்கடத்தலில் இருவருக்கும் பங்கு உண்டு என்பதற்கு ஆதாரம் உள்ளதால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave your comments here...