சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க 101 வகையான பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

இந்தியா

சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க 101 வகையான பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க 101 வகையான பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் வண்ணம் ஆத்ம நிர்பார் பாரத் அபியான் என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கு சுயசார்பு இந்தியா என்று பொருள்படும். இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் படிப்படியாக குறைக்கப்படும். இதனால் ஏராளமான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சுயசார்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் :- சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க பாதுகாப்புத்துறைக்கான 101 பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது. பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அமைப்புடன் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பீரங்கி துப்பாக்கிகள், துப்பாக்கிகள், போக்குவரத்து விமானம், ரேடார் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை 2020 முதல் 2024 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


இந்த நடவடிக்கையானது, இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை, சொந்த வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி திறன்கள் மூலம் அல்லது, ஆயுதப்படைகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு உருவாக்கியுள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தயாரிப்பதற்காக, இந்திய பாதுகாப்பு துறையினருக்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பாகும். பாதுகாப்பு உபகரணம், தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து தரும் அமைப்புக்கு புது வாய்ப்பை ஏற்படுத்தி தர முடியும்.


கடந்த 2015 முதல் 2020 ஆக., வரை 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 260 திட்டங்களுக்கு முப்படைகள் ஒப்பந்தம் போட்டுள்ளன. தற்போது, அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கும் போது 4 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருட்களை பெற முடியும்.அதில், 1,30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், ராணுவம் மற்றும் விமானப்படைக்கு மதிப்பிடப்பட்டுள்ளது. 1,40,000 கோடி மதிப்பு பொருட்கள் கடற்படைக்காக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.2020 முதல் 2024 வரை, இறக்குமதிக்கான தடை, படிப்படியாக அமல்படுத்தப்படும். ஆயுதப்படைகளின் தேவைகள் குறித்து, இந்திய பாதுகாப்பு துறையினருக்கு அறிவிப்பதே எங்கள் நோக்கம். இதன் மூலம், அவர்கள், உள்நாட்டு மயமாக்கலின் இலக்கை சிறப்பாக அடைய முடியும்.


இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை, குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தியாவில் தயாரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தி, இறக்குமதி செய்ய வேண்டிய மேலும் சில ராணுவ தளவாடங்கள் எதிர்காலத்தில் கண்டறியப்படும். தடை செய்யப்பட்ட தளவாடங்கள், எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படாது என்பதும் உறுதிபடுத்தப்படும்.2020- 21ம் நிதியாண்டில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதி என நிதி வகைபடுத்தப்படும். நடப்பு நிதியாண்டில், 52 ஆயிரம் கோடி அளவுக்கு உள்நாட்டில் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான பட்ஜெட் தயாரிக்கப்படும். இவ்வாறு ராஜ்நாத் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...