‘MOTN’ ஆய்வில் தகவல் – நாட்டின் மிகச்சிறந்த பிரதமர் மோடி ..!

இந்தியா

‘MOTN’ ஆய்வில் தகவல் – நாட்டின் மிகச்சிறந்த பிரதமர் மோடி ..!

‘MOTN’ ஆய்வில் தகவல் –  நாட்டின் மிகச்சிறந்த பிரதமர் மோடி ..!

இந்தியா டுடே மற்றும் Karvy Insights Mood of the Nation நிறுவனம் இணைந்து இந்தியாவின் சிறந்த பிரதமர் குறித்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளது.இதில் 44 விழுக்காடு வாக்காளர்கள் இந்தியாவின் சிறந்த பிரதமராக நரேந்திர மோடியை தேர்வு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட ஆய்வை விட 10 சதவீத ஓட்டுகள் பிரதமர் மோடிக்கு கூடுதலாக கிடைத்துள்ளது. கடந்த ஆய்வில் பிரதமர் மோடிக்கு 34 சதவீத ஓட்டுகளும், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு 16 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. வாஜ்பாய்க்கு 13 சதவீத ஓட்டுகள் கிடைத்ததால் அவர் மூன்றாம் இடத்திற்கு சென்றார். ஜவஹர்லால் நேருவுக்கு 8 சதவீத ஓட்டுகளும், ராஜீவ் காந்திக்கு 5 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.

கடந்த 4 ஆண்டுகளில் மக்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு அதிகரித்ததால் அவர் தற்போது கூடுதலான ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் உள்ளார்.இந்தியாவின் பிரதமராக மோடியே வருவார் என்று 66 சதவீத மக்கள் ஓட்டளித்துள்ளனர். ராகுல் பிரதமராக வருவார் என்று 8 சதவீதம் பேரும், சோனியா வருவார் என்று 5 சதவீதம் பேரும், அமீத்ஷா பிரதமராக வருவார் என்று 4 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியை வழிநடத்த ராகுலே சரியானவர் என்று 23 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். டில்லியைச் சேர்ந்த ‘Karvy Insights Mood of the Nation’ என்ற அமைப்பு சார்பாக கடந்த ஜூலை 15 முதல் ஜூலை 27 வரை ஆய்வு நடந்தது. இந்தியாவின் 19 மாநிலங்களில் உள்ள 97 எம்.பி., தொகுதிகள், 194 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 12,201 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு வெளியாகி உள்ளது.

Leave your comments here...