உதயநிதி ஸ்டாலினின் ட்வீட் : 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது..! வதந்திகளை பரப்பினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசியல்

கொரோனா குறித்து வதந்திகளை சமூகவலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசின் பன்முக நடவடிக்கையால் குணமடைந்தோர் விகிதம் 77.8 சதவீதம் ஆக உள்ளது. நாட்டிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை நிலையங்களை கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

தமிழகத்தில் கொரோனாவால் 43 டாக்டர்கள் இறந்துவிட்டதாக ஆதாரமில்லாத செய்தியை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இந்த செய்தி தவறானது. திமுக., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் இந்த தவறான செய்தியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் திட்டமிட்டு தவறான தகவல்களை வெளியிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களின் மன உறுதியை குலைக்க வேண்டாம். பீதியை, அச்சத்தை, பயத்தை விதைக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...