இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் நிரந்தர ஆணையத்துக்கு அனுமதி – விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய ராணுவத் தலைமையகம் அறிவுறுத்தல் ..!

இந்தியா

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையத்தை அமைப்பதற்கான அரசின் முறையான அனுமதிக் கடிதம் பெறப்பட்டதைத் தொடர்ந்து, ராணுவத் தலைமையகம், இந்த ஆணையத்துக்கான பெண் அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கான சிறப்பு எண் 5 தேர்வு வாரியக் கூட்டத்தைக் கூட்டும் நடைமுறையில் ஈடுபட்டுள்ளது. வாரியத்தின் பரிசீலனைக்காக, பாதிக்கப்பட்ட அனைத்து பெண் அதிகாரிகளும் தங்கள் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யுமாறு, விரிவான அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மகளிர் சிறப்பு நுழைவுத் திட்டம் மூலமாக ராணுவத்தில் சேர்ந்த பெண் அதிகாரிகள், குறுகிய சேவை ஆணையப் பெண்கள் ஆகியோர் இதற்குப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும், தங்கள் விண்ணப்பப் படிவங்கள், விருப்பச் சான்றிதழ், மற்றும் இது தொடர்பான ஆவணங்களை இம்மாதம் 31-ஆம் தேதிக்குள் ராணுவத் தலைமையகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சரியான ஆவணப்படுத்துதல் நடைமுறைக்காக, நிர்வாக அறிவுறுத்தல்களில், மாதிரிப் படிவங்கள் மற்றும் விரிவான சரிபார்ப்புப் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளன.

கோவிட் பரவல் காரணமாக நிலவும் கட்டுப்பாட்டுச் சூழலில், பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண் அதிகாரிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில், இந்த ஆவணங்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அறிவுறுத்தல்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் தகவலைப் பரப்ப பல்வேறு வழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்ட பின்னர் தேர்வு வாரியம் உடனடியாகக் கூடும்.

Leave your comments here...