பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி : மனிதர்கள் மீதான பரிசோதனை தொடக்கம் – ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் ட்வீட்..!

இந்தியா

பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி : மனிதர்கள் மீதான பரிசோதனை தொடக்கம் – ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் ட்வீட்..!

பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி : மனிதர்கள் மீதான பரிசோதனை தொடக்கம் – ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர்  ட்வீட்..!

பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி , இன்று மனிதர்கள் மீது செலுத்தப்பட்டு , அடுத்தக்கட்ட பரிசோதனை தொடங்கியுள்ளது.

ஐதராபாத் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு ‘கோவாக்சின்’ (COVAXIN) என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. முன்னதாக ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி மருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. ‘கோவாக்சின்’ தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது.

கோவாக்ஸின் என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தகக்து.

இந்த நிலையில், அரியானாவின் ரோடக் பிஜிஐ மருத்துவமனையில் கோவேக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் செலுத்தும் மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட்டு விட்டதாக அரியானா சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அனில் விஜ் கூறுகையில், “ 3 பேரிடம் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தடுப்பு மருந்துக்க அவர்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை” என்றார். இதனை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...