விஸ்வரூபம் எடுக்கும் கேரளா தங்க கடத்தல் விவகாரம் : சட்டசபை செயலாளருக்கு காங்கிரஸ் கடிதம் – பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.!

அரசியல்இந்தியா

விஸ்வரூபம் எடுக்கும் கேரளா தங்க கடத்தல் விவகாரம் : சட்டசபை செயலாளருக்கு காங்கிரஸ் கடிதம் – பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.!

விஸ்வரூபம் எடுக்கும் கேரளா தங்க கடத்தல் விவகாரம்  : சட்டசபை செயலாளருக்கு காங்கிரஸ் கடிதம் – பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.!

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், பினராயி விஜயன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

தூதரக பார்சல் என்ற பெயரில் திருவனந்தபுரம் விமான நிலையம் மூலம் தங்கம் கடத்த முயன்ற வழக்கில் தினமும் புதுப்புது திருப்பங்கள் நிகழ்கின்றன. தங்கம் கடத்தல் வழக்கில் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகளான ஸரித், ஸ்வப்னா ஆகியோருடன் தொடர்பில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனை சஸ்பெண்ட் செய்து முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிவித்தார். முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்தவர் சிவசங்கரன் என்பதால் அரசியல்ரீதியாக காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி ஆகிய கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றன.பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ், பி.ஜே.பி ஆகிய கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

கேரள முதல்வர் அலுவலகத்திற்கும், தங்கம் கடத்தலில் மூளையாக செயல்பட்ட ஸ்வப்னாவுக்கும் தொடர்பு இருப்பதால், காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளன. தங்க கடத்தலுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், கேரள மாநில அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் சட்டசபை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை இல்லை என்பதால், கேரள சட்டசபையில் பினராயி விஜயன் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வர விரும்புவதாக கூறப்பட்டுள்ளது

Leave your comments here...