முருகரையும் இந்து கடவுள்களையும் வருடக்கணக்கில் கொச்சைப்படுத்தும் கறுப்பர் கூட்டம் – வேடிக்கை பார்க்கிறதா தமிழக அரசு – பாஜக எஸ்.ஜி.சூர்யா கேள்வி..?

அரசியல்தமிழகம்

முருகரையும் இந்து கடவுள்களையும் வருடக்கணக்கில் கொச்சைப்படுத்தும் கறுப்பர் கூட்டம் – வேடிக்கை பார்க்கிறதா தமிழக அரசு – பாஜக எஸ்.ஜி.சூர்யா கேள்வி..?

முருகரையும் இந்து கடவுள்களையும் வருடக்கணக்கில் கொச்சைப்படுத்தும் கறுப்பர் கூட்டம்  – வேடிக்கை பார்க்கிறதா தமிழக அரசு – பாஜக எஸ்.ஜி.சூர்யா கேள்வி..?

முருகரையும் இந்து கடவுள்களையும் வருடக்கணக்கில் கொச்சையாக அவமதித்தவர்களை(கறுப்பர் கூட்டம்) கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறதா தமிழக அரசு என தமிழக பாஜக இளைஞர் அணி சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா, கேள்வி எழுப்பியுள்ளார்.

நாத்திக கருத்துகளை பரப்புவது போல சிலர், ‘கருப்பர் கூட்டம்’ என்ற, ‘யூ டியூப் சேனல்’ நடத்தி வருகின்றனர்.அதில், ஆபாச புராணம் என்ற பெயரில், கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், வீடியோ வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து, இது போன்ற கருத்துகளை பரப்பிவருகின்றனர்.இதனை கண்டித்து பாஜக இந்து முன்னணி சார்பில் பல்வேறு மாவட்டங்களில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் விழுப்புரத்தில் இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக கேலி சித்திரம் வரைந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கார்டூனிஸ்ட் வர்மா (எ) சுரேந்திரகுமார் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இது குறித்து பாஜக இளைஞர் அணி சேர்ந்த எஸ்.ஜி.சூர்யா, அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் :-


முருகரையும் ஹிந்துக் கடவுள்களையும் வருடக்கணக்கில் கொச்சையாக அவமதித்தவர்களை(கறுப்பர் கூட்டம்) கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசும், காவல்த்துறையும் அதே போன்ற ஒன்று மற்ற மதத்தினருக்கு நேர்ந்தால் கொதித்தெழுந்து உடனடியாக கைது நடவடிக்கையை செய்கிறது. இது காலம் காலமாக தமிழகத்தில் நடந்து வருகிறது, தற்போது ஓவியர் வர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கெல்லாம் தீர்வு அரசியல் அதிகாரம் என்ற ஒன்று மட்டுமே. அதை அடையும் வரை நாம் எள்ளி நகையாடப்படுவோம் என்பதே எதார்த்தம். இந்த விஷயத்தை அனுபவரீதியாக முற்றிலும் உணர்ந்தவர்களாக பிரதமர் மோடியும், உள்த்துறை அமைச்சர் அமித் ஷாவும் இருப்பதனால் மட்டுமே சரித்திர மாற்றங்கள் நம் நாட்டில் 70 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்று வருகிறது.

அந்த நாள் தமிழகத்திலும் நிச்சயம் வரும். அதற்காக மோடி, அமித்ஷா மற்றும் பா.ஜ.க-வின் கரங்களை வலுப்படுத்துவது ஒன்றையே குறிக்கோளாக எடுத்துக்கொண்டு செயல்படுவோம், பா.ஜ.க-வின் வளர்ச்சி மட்டுமே தமிழகத்தை மீட்க முடியும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்

Leave your comments here...