இம்ப்ரோ சித்த மருத்துவப் பொடியில் கொரோனாவ கிருமியை கட்டுப்படுத்தும் திறன் உள்ளதா..? மத்திய ஆயுஷ் அமைச்சகம் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு..?

இந்தியாதமிழகம்

இம்ப்ரோ சித்த மருத்துவப் பொடியில் கொரோனாவ கிருமியை கட்டுப்படுத்தும் திறன் உள்ளதா..? மத்திய ஆயுஷ் அமைச்சகம் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு..?

இம்ப்ரோ சித்த மருத்துவப் பொடியில் கொரோனாவ கிருமியை கட்டுப்படுத்தும் திறன் உள்ளதா..? மத்திய ஆயுஷ் அமைச்சகம் பதில் அளிக்க  உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு..?

<hr>கொரோனாவுக்காக கண்டுபிடிக்கப்பட்ட இம்ப்ரோ சித்த மருத்துவப் பொடியை மத்திய அரசு பரிசோதிக்க வேண்டும் என்று  மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிசோதித்து ஆகஸ்ட் 3ல் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் உள்ளடங்கிய இம்ப்ரோ என்ற பொடியைத் தயாரித்திருந்தார். பின்னர் இந்தப் பொடியை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார்.  இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் அடங்கிய ‘இம்ப்ரோ’ என்ற சித்த மருந்தை புதிதாக கண்டுபிடித்துள்ளேன்.

இந்த மருத்துவ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து, தினமும் இருவேளை சாப்பிடுவதற்கு முன்பு குடித்தால் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடலாம். இந்த மருந்தால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தக்கூடிய சித்த மருந்தான இம்ப்ரோவை, நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தார்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழக அரசின் உயர் மட்ட குழுவுக்கு இது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. தமிழக அரசின் குழு இந்த மருத்துவப் பொடியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக தெரிவித்தது.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மருத்துவப் பொடியை மத்திய அரசு ஆய்வு செய்து ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.மேலும் இந்தியாவில் இந்திய மருத்துவம் தொடர்பான ஆய்வுகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே இது தொடர்பான ஆய்வுகளுக்கு போதுமான அளவு நிதி ஒதுக்க வேண்டும். சித்த மருத்துவப் பொடி குறித்து ஆய்வு செய்து அரசிதழிலும் வெளியிட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

Leave your comments here...