டி.எஸ்.பி., தேவிந்தர் சிங் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல்..!

இந்தியா

டி.எஸ்.பி., தேவிந்தர் சிங் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல்..!

டி.எஸ்.பி., தேவிந்தர் சிங் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல்..!

ஜம்மு — காஷ்மீரில், டி.எஸ்.பி.,யாக பதவி வகித்தவர், தேவிந்தர் சிங். குறிப்பிட்ட ரகசிய தகவல் மூலம், போலீஸ் ஜனவரி 11, 2020 அன்று, காசிகுண்ட் அருகே ஒரு காரை தடுத்து நிறுத்தியது. அதில் தேவிந்தர் ஹிஸ்புல் தளபதியுடன் ஒன்றாக ஜம்முவுக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

நவீத் பாபு மற்றும் இர்பான் ஷாஃபி மிர் என்ற வழக்கறிஞர் ஆகியோரும் அந்த காரில் பயணம் செய்து கொண்டிருந்ததால் அவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது.மேலும் அவர்களின் வாகனத்தில், ஏ.கே 47 ரக துப்பாக்கி 3 கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டன. விசாரணையின் போது, தேவிந்தர் தனது சொந்த காரை ஹிஸ்புல் பயங்கரவாதியின் இயக்கத்திற்கு பயன்படுத்தியதை என்ஐஏ கண்டறிந்தது. மேலும் ஆயுதங்களை வாங்குவதில் அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்ததும் தெரிய வந்தது.

இவர், பாகிஸ்தான் உளவாளியாக ஐ.எஸ்.ஐ’க்கு முக்கியமான தகவல்களை வழங்குவதைத் தவிர, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதத்தை தூண்டி விடுவதற்காக பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கடத்த உதவுவதே அவரது வேலை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கடந்த ஜனவரியில், கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

இவர் மீது, டில்லி போலீசார், 90 நாட்களுக்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறியதை அடுத்து, டில்லி நீதிமன்றம், கடந்த மாதம், அவருக்கு ஜாமின் வழங்கியது.இந்நிலையில், தேவிந்தர் சிங் மீது, பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, ஜாமின் கிடைத்தும், அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வில்லை.

இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.இந்நிலையில், முன்னாள் டி.எஸ்.பி., தேவிந்தர் சிங் உட்பட, ஆறு பேர் மீது, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Leave your comments here...