மழை நீர் வடிகால் அமைக்கும் திட்டம்.! 45 டெண்டர்களுக்கு இடைக்கால தடை.!!
- September 18, 2019
- jananesan
- : 945
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 4வது மற்றும் 6வது மண்டலங்களான தண்டையார்பேட்டை, அயனாவரம் பகுதிகளில் நான்கரை கோடி ரூபாய் மதிப்பில் மழை நீர் வடிகால் மற்றும் அதன் பராமரிப்பு உள்ளிட்ட 45 விதமான பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டரை பெற மாநகராட்சி புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளதால், டெண்டருக்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த மகாதேவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த மனுவில், புதிய நடைமுறை காரணமாக தகுதிவாய்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்படாமல் வேண்டியவர்களுக்கு ஒதுக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிப்படைத் தன்மை இல்லாமல் நடத்தப்பட இருக்கும் டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டரை அறிவிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற இருந்த டெண்டர் திறப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.
…நமது நிருபர்
பாண்டியன்