தொண்டு நிறுவனங்களுக்கு இறுக்குப்பிடி.! மத்திய அரசு அதிரடி உத்தரவு.!!
- September 18, 2019
- jananesan
- : 847
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதியை பெற்று, மத மாற்றத்தில் ஈடுபடுவது, அரசுக்கு எதிரான போராட்டங்களை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் மத மாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பான குற்றத்துக்காக, எந்த வழக்கிலும், தண்டனை எதுவும் பெறவில்லை என்றும், வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதற்கான சான்றிதழையும் அரசுக்கு அளிக்க வேண்டும். இதுவரை, வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்காக, தொண்டு நிறுவனங்களின் இயக்குனர்கள் அந்தஸ்திலான அதிகாரிகள் மட்டுமே இது போன்ற சான்றிதழை அளிக்கும்படி, விதிமுறை இருந்தது. அதில், தற்போது மாற்றம் செய்யப்பட்டு, தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து உறுப்பினர்களும், இதுபோன்ற சான்றிதழை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதேபோல், வெளிநாட்டு நிதியை தவறாக பயன்படுத்தி, மத மாற்றம், தேசதுரோக செயல் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழியையும், அவர்கள் அளிக்க வேண்டும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனார்.
..நமது நிருபர்