கீழடி அகழாய்வு குறித்த நூலை வெளியிட்டார் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்
- September 19, 2019
- jananesan
- : 1295
சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. தற்போது, கீழடி கிராமம் அகழ்வாராய்ச்சி குறித்து வரும் ’கீழடி’ என்ற நூலை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் வெளியிட்டுள்ளார்.
வைகை நதி தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும். இதில், சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட காளையின் திமில் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழாய்வில் எழுத்துக் கீறல்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், கி.மு 6-ம் நூற்றாண்டில் தமிழர்களிடையே எழுதும் பழக்கம் இருந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
..நமது நிருபர்