80 காவலர்கள் பணியில் இருந்து விடுவிப்பு – திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு..!
- June 30, 2020
- jananesan
- : 908
சாத்தான்குளம் சம்பவத்தின் எதிரொலியாக, பொதுமக்களிடம் அத்துமீறியதாக 80 போலீசாரை காவல் நிலைய பணியில் இருந்து விடுவித்து திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி காவல் சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மக்களோடு நேரடித் தொடர்பில், காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் 80 பேர் காவல் நிலைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நடத்தையை சீர் செய்யப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும், அதற்காக பிரத்யேகமான அறிவாற்றல் நடத்தை சிகிச்சைக்கு ( Cognitive Behavioural Therapy) உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அந்த சிகிச்சை முடியும் வரை, இந்த காவலர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டதுள்ளது. சிகிச்சை முடிந்து அதில் அவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே களப்பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
Leave your comments here...