கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கிய பாரத் பயோடெக் நிறுவனம் அ
- June 30, 2020
- jananesan
- : 1023
கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டால், முதலில் அதை யார் பெறுவார்கள்? என்ற கேள்விக்கு பதில், இந்த தடுப்பூசியை முதலில் உருவாக்கும் நாடு, அங்குள்ளவர்களுக்கு தான் முதலில் தடுப்பூசி கிடைக்கும்.கொரோனா வைரஸ்களைத் தடுப்பதற்கான தடுப்பூசி பணிகள் வேகமாக முன்னேறக்கூடும் மற்றும் உலகம் முழுவதும் எதிர்பார்ப்புகள் எழுப்பப்படுகின்றன.
உலக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு, 200க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்பட்டு, அவை பல்வேறு சோதனை நிலைகளில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம், அமெரிக்காவின் சிறந்த தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபவுச்சி இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவின் முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக ஐதராபாத்தை சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) உடன் இணைந்து தயாரித்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ‛கோவேக்சின்’ என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை, அடுத்த மாதம் (ஜூலை), நாடு முழுவதும் இரண்டு கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரின் ஒப்புதலை பெற்றுள்ளது. மனிதர்களிடம் நடத்தப்படும் சோதனையிலும் வெற்றி பெறும் பட்சத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய கட்டத்திற்கு உலகம் நகரும் என எதிர்பார்க்கலாம்.
இந்நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் சுசித்ரா எல்லா கூறுகையில், தற்போதைய இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு வரும் நோக்கில் எங்கள் ஆராய்ச்சியை செலுத்தினோம்.இதுவே கோவிட்-19 தொற்றுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி கண்டுபிடிக்க உதவியது. வருங்காலத்தில் பெரும் நோய்த் தொற்றுக்கு எதிராக இந்தியாவின் சிறப்பான நடவடிக்கை அமையும் வகையில் எங்களது முயற்சி அமைந்துள்ளது என்றார்.
Leave your comments here...