ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு, மத்திய அரசு, 620 கோடி ரூபாய் ஒதுக்கீடு..!

இந்தியா

ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு, மத்திய அரசு, 620 கோடி ரூபாய் ஒதுக்கீடு..!

ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு, மத்திய அரசு, 620 கோடி ரூபாய் ஒதுக்கீடு..!

ரயில் பெட்டிகளை கொரோனா தனிமை வார்டாக மாற்றுவதற்கு, மத்திய அரசு, 620 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், ஒவ்வொரு பெட்டிக்கும், தலா, இரண்டு லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ரயில் பெட்டிகளை மருத்துவ வசதிகள் அடங்கிய வார்டுகளாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது, இதனை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதிகளை மத்திய அரசு செய்துவருகிறது.இதன் காரணமாக இயக்கப்படாமல் இருக்கும் ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றியமைத்துள்ளனர். ரயில் பெட்டியில் உள்ள ஒவ்வொரு கேபினும், ஒருவரை உள்ளடக்கும் வகையில் தனி வார்டுகளாக மாற்றப்படுகிறது.ஒரு பெட்டியில் 9 கேபின்கள் உள்ளன. ஒரு பெட்டியில் இருக்கும் 4 கழிவறைகளில் ஒன்றை குளியலறையாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறது.’நாடு முழுவதும், 20 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயாராகி வருகின்றன.

இது குறித்து ரயில்வே வாரிய தலைவர், வி.கே.யாதவ் கூறியதாவது: ரயில் பெட்டிகளை தனிமை வார்டாக மாற்று வதற்கு, மத்திய அரசிடமிருந்து, 620 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. ஒவ் வொரு பெட்டியையும் வார்டாக மாற்றுவதற்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாய் செலவாகிறது. கொரோனாவால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய தொழிலாளர்கள், ஏற்கனவே சிறப்பு ரயில்கள் மூலமாக தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி விட்டனர்.தற்போது நிலைமை மேம்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் மீண்டும் தாங்கள் பணியாற்றிய மாநிலங்களுக்கு திரும்பும் நடவடிக்கை அதிகரித்து உள்ளது.

உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பீஹார் போன்ற மாநிலங்களில் இருந்து, நாட்டின் பெரும் நகரங் களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் வாயிலாக, இது தெரியவந்து உள்ளது.மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப, கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave your comments here...