சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு – 12 பேர் மீது என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழகம்

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு – 12 பேர் மீது என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு –  12 பேர் மீது என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

தமிழக-கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குமரி மாவட்டம் திருவிதாங்கோடு, நாகர்கோவில் இளங்கடை ஆகிய பகுதிகளை சேர்ந்த அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு இடையேயான பணப்பரிவர்த்தனைக்கு உடந்தையாக இருந்த பிச்சைக்கனி, அமீர் மற்றும் முகமது அலி ஆகிய மூவரை, ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே தீவிரவாத தொடர்புடையை 17 பேர் மீது பெங்களுரு போலீசார் கடந்த 10-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.இதில் காஜா மொய்தீன், பாட்ஷா தலைமையிலான கும்பல் தமிழக -கர்நாடக வனப்பகுதியில் ஆயுத பயிற்சி எடுத்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதாகி தலைமறைவாக இருந்த காஜா மொய்தீன் உள்ளிட்ட கும்பலை டெல்லி போலீசார் கைது செய்தனர்.இவர்களுக்கு, போலி ஆவணங்கள் வாயிலாக, சிம்கார்டுகள் வாங்கி கொடுத்ததாக, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த, பச்சையப்பன்(37), சென்னையை சேர்ந்த, ராஜேஷ்(34), சேலத்தை சேர்ந்த அன்பரசன் (27), அப்துல் ரகுமான் (44), லியாகத் அலி (29), பெங்களூருவை சேர்ந்த முகமது ஹனீப் கான்(29), இம்ரான் கான்(32), முகமது ஜயீத்(24), இஜாஸ் பாஷா(46), ஹூசைன் ஷெரீப்(33), மெகபூப் பாஷா (48) மற்றும் கடலூரை சேர்ந்த காஜா மொய்தீன்(52) ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வில்சன் கொலை வழக்கை விசாரித்து வரும், என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் நேற்று, பச்சையப்பன் உள்ளிட்ட, 12 பேர் மீது, சென்னை, பூந்தமல்லியில் உள்ள, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.12 பேர் மீது குற்றப்பத்திரிகை

Leave your comments here...