கொரோனா வைரஸ் : 7 நாட்களில் குணமடையும் : ஆயுர்வேத மருந்தை கண்டுபடித்த பதஞ்சலி நிறுவனம்..!

இந்தியா

கொரோனா வைரஸ் : 7 நாட்களில் குணமடையும் : ஆயுர்வேத மருந்தை கண்டுபடித்த பதஞ்சலி நிறுவனம்..!

கொரோனா வைரஸ் : 7 நாட்களில் குணமடையும் : ஆயுர்வேத மருந்தை கண்டுபடித்த பதஞ்சலி நிறுவனம்..!

கொரோனா வைரஸின் தாக்கம் இன்று உலக நாடுகளை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்தபொழுதும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்பவே கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

உலகையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இதில் சில நாடுகள் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று வருகின்றன.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முதல் ஆயுர்வேத மருந்தை பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் அறிவித்துள்ளார். இந்த மருந்துக்கு கொரோனில் மற்றும் ஸ்வசரி (Coronil and Swasari) என பெயர் வைத்துள்ளதாகவும், மருத்துவ ரீதியிலான சோதனையில் 100% வெற்றியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இந்த மருந்தின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 முதல் 7 நாட்களில் 100% பூரணகுணமடைந்து விடுவார்கள் என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் NIMS இணைந்து இந்த மருந்தை தயாரித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 280 கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை அளித்து பரிசோதனை செய்ததாகவும் கூறியுள்ளார்.

Leave your comments here...