பாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்திய இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள்

இந்தியா

பாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்திய இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள்

பாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்திய இந்திய  பாதுகாப்புப் படை வீரர்கள்

ஜம்மு- காஷ்மீர் எல்லையையொட்டிய பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்துவதுடன், பயங்கரவாதிகளையும் ஊடுருவ செய்து வருகின்றனர். இதை முறியடிக்க எல்லை நெடுகிலும் இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில், சர்வதேச எல்லை அருகே உள்ள பன்சார் செக்போஸ்ட்டில், இன்று காலை 5: 10 மணியளவில், இந்திய பகுதிக்குள் 250 மீட்டர் தூரம் வரை பாகிஸ்தானின் உளவு ட்ரோன் வந்துள்ளது. இதனை பார்த்த எல்லை பாதுகாப்பு படை எஸ்ஐ தேவேந்திர சிங், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் 8 ரவுண்டுகள் சுட்டு அந்த டுரோனை வீழ்த்தினார். அதில் இருந்த பல ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.


இது குறித்து பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், “அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒரு எம் 4 துப்பாக்கி, இரண்டு தோட்டா மேக்சின்கள், 60 சுற்று வெடிமருந்துகள் மற்றும் ஏழு கையெறி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முதல்கட்ட விசாரணையில் இது ‘அலி பாய்’ என்பவருக்கு இது டெலிவரி செய்யப்படுவதாக இருந்ததாக தெரிவந்து உள்ளது என கூறினார்.

Leave your comments here...