சீனாவுக்கு வர்த்தக ரீதியாக முதல் அடி கொடுத்த இந்தியா : சீன நிறுவனத்துக்கு அளித்த ரூ.471 ஒப்பந்தம் ரத்து..!

இந்தியாஉலகம்

சீனாவுக்கு வர்த்தக ரீதியாக முதல் அடி கொடுத்த இந்தியா : சீன நிறுவனத்துக்கு அளித்த ரூ.471 ஒப்பந்தம் ரத்து..!

சீனாவுக்கு வர்த்தக ரீதியாக  முதல் அடி கொடுத்த இந்தியா  : சீன நிறுவனத்துக்கு அளித்த ரூ.471 ஒப்பந்தம் ரத்து..!

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், ( ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம் கான்பூர்-முகல்சாரி இடையே சிக்னல் மற்றும் தொலைத்தொடர்புப் பணிக்காக ரூ.471 கோடி மதிப்பில் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா, மேற்கு வங்கத்தின் தங்குனி இடையே சரக்குப் போக்குவரத்திற்கென்றே தனி ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் உ.பி., கான்பூர் மற்றும் முகல்சராய் இடையே 417 கி.மீ., தூரத்திற்கு சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பணிகளைச் செய்யும் ஒப்பந்தம் ஒன்று சீனாவின் பீஜிங் நேசனல் ரயில்வே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2016 ம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில் 4 ஆண்டுகளாக 20 சதவீத பணிகளே நிறைவடைந்துள்ளது. முறையாக பணிகளை முடிக்காத காரணத்தால் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 471 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே ரத்து செய்தது.இந்நிலையில் எல்லைப் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில் காரணமாகவும் பாதுகாப்பு நிமித்தமாகவும் சீன தயாரிப்பு பொருட்களை தவிர்க்குமாறு பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.எஸ்.டி.என்.எல்., நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் எல்லைப் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில் காரணமாகவும் பாதுகாப்பு நிமித்தமாகவும் சீன தயாரிப்பு பொருட்களை தவிர்க்குமாறு பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.எஸ்.டி.என்.எல்., நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave your comments here...