கடவுளின் தேசத்தில் இப்படி ஒரு காரியமா..? கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் அமைத்து வழிபாடு..!

இந்தியா

கடவுளின் தேசத்தில் இப்படி ஒரு காரியமா..? கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் அமைத்து வழிபாடு..!

கடவுளின் தேசத்தில் இப்படி ஒரு காரியமா..? கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் அமைத்து வழிபாடு..!

கொரோனா பாதிப்புகளையொட்டி, கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் அமைத்து பக்தர் ஒருவர் விநோதமாக வழிபாடு செய்து வருகிறார்.

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கேரளாவில் எண்ணற்றவர்கள் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கு தளர்வுகளை ஒட்டி தற்போது படிப்படியாக வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பக்தர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடக்கல் என்னும் இடத்தில் அணிலன் என்ற பக்தர் கொரோனா சிலையை நிறுவி கொரோனா தேவி ஆலயம் உருவாகினார்.

இது குறித்து அணிலன் கூறியதாவது:- 33 கோடி இந்து கடவுள்களுடன் கூடுதலாக மேலும் ஒரு கடவுள். தொற்றுநோய்க்கு எதிரான போரில் ஈடுபடும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் தெய்வத்தின் முன் பூஜைகளை நடத்துவேன். கோயில்கள் மீண்டும் திறக்கப்படுவதன் பின்னணியில் உள்ள அரசியல் பிரச்சாரத்திற்கு எதிரான போராட்டம் என்பதால் தரிசனம் இருக்காது என்பது தெரியும்.

மக்கள் இப்போது அரசியல் ஆதாயங்களுக்காக கடவுளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இப்போது கோவில் வருகைக்கு நேரம் இல்லை. வேலை கிடைப்பது என்பது இப்போது முக்கியமானதாகி உள்ளது.தெர்மோகால் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தேவி எந்த ‘மூலமந்திரமும்’ இல்லாத தெய்வம் ஆகும். கேரளாவில், பெரியம்மை நோய்க்கான தெய்வம் உள்ளது, இது யாரையும் கேலி செய்யும் முயற்சி அல்ல, அனைத்து பூஜைகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யப்படும். இந்து புராணங்களின்படி, கடவுள் எங்கும் நிறைந்தவர், வைரஸில் கூட இருக்கிறார். ஒரு வைரஸை தேவி என்று வணங்குவது எங்களுக்கு ஒரு புதிய வழக்கம் அல்ல. ரிசனம் இல்லை என்றாலும், கொரோனா தேவியின் பிரசாதம் பக்தர்களுக்கு அஞ்சல் மூலம் கிடைக்கும்.

இந்த ஆலயம் சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் உள்ளிட்ட கொரோனா வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு உதவுபவர்களின் பெயர்களில் பூஜைகள் நடைபெறும். பிரசாதம் விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். பூஜைகள் மற்றும் பிரசாதங்களுக்கு நான் பணம் வசூலிக்க மாட்டேன்.இந்நிலையில் பலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து உள்ளார்ண கடவுளின் தேசம் என கருதப்படும் கேரளாவில் இப்படிய என…?

Leave your comments here...