கடைமடை பகுதிக்கும் காவிரி நீர் கிடைக்க டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் – அரசிற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

தமிழகம்

கடைமடை பகுதிக்கும் காவிரி நீர் கிடைக்க டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் – அரசிற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

கடைமடை பகுதிக்கும் காவிரி நீர் கிடைக்க டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்  – அரசிற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

கடைமடை பகுதிக்கும் காவிரி நீர் கிடைக்க டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா அரசிற்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- 86 ஆண்டுகளுக்கு முன்பு 4 கோடியே 80 லட்ச ரூபாயில் காவிரியின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட மேட்டூர் அணைதான் டெல்டா மாவட்டங்களின் பிரதான நீராதாரம். அதிகபட்சம் 120 அடிக்கு நீர்தேக்கி 93.47 டிஎம்சி நீரை இருப்பு வைப்பதால் காவிரி டெல்டா நெற்களஞ்சியமாய் திகழ அணையும் ஒரு காரணமாகிறது. டெல்டா பாசனத்திற்காக வழக்கமாக தண்ணீர் திறக்க வேண்டிய தேதி ஜூன் 12. அப்படித் திறந்தால் ஜனவரி 28 வரை 231 நாட்களுக்கு 300 டிஎம்சி அளவுக்கு காவிரி கடைமடைக்கும் பயணித்து பயிர்களின் தாகத்தையும் உயிர்களின் பசியையும் போக்கும்.

சேலம், ,நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை , திருவாரூர், கடலூர் , பெரம்பலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16 புள்ளி 05 லட்சம் ஏக்கர் நிலங்களை செழிப்பாக்குறது மேட்டூர் அணையின் நீர். இதில் குறுவை, சம்பா, தாளடி என முப்பருவ நெல் சாகுபடி நடைபெறும். பாசனத்திற்கு நீர் திறக்க அணையில் நீர்மட்டம் 90 அடிக்கு மேலாகவும், நீர் இருப்பு 60 டிஎம்சிக்கு மேலாகவும் இருக்க வேண்டும். நீர்வரத்தையும் நீர் இருப்பையும் பொறுத்தும் அணை திறக்கும் தேதி மாறுபடும்.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் அணையில் நீர் குறைவாக இருப்பது, காவிரி நதிநீர் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் ஜூன் 12-ம் தேதி திறக்க முடியாத சூழ்நிலை உருவாகும். மேட்டூர் அணையில் தற்போது, 101.70 அடி நீர் மட்டம் உள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்ட 86 ஆண்டுகளில் இதுவரை 15 ஆண்டுகள் மட்டுமே ஜூன் 12-ம் தேதி இதுவரை அணை திறக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2008-ம் ஆண்டு தான் ஜூலை 12-ம் தேதி அணை திறக்கப்பட்டது.

“தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர்அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதால் விவசாயப் பணிகளில் ஈடுபட விவசாயிகள் தயாராகிக்விட்டனர். இந்த நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாயக் கடன் அனைத்தும் விவசாயக் கடன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டுமென்று மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் கூட்டுறவு துறை மாநிலப் பதிவாளர் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஆனால், தமிழ்நாட்டிலுள்ள மொத்த விவசாயிகளில் 25 சதவீதம் விவசாயிகளுக்குத்தான் இதுவரை விவசாயக் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பகுதியான விவசாயிகள் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கடன் கோருகிற அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தாமதமின்றிக் கடன் கிடைத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று மத்திய- மாநில அரசுகள் வழங்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் அரசை கேட்டுக் கொள்கிறேன்

Leave your comments here...