பகவத் கீதையில், உறுதி, வலிமை மற்றும் அமைதியை காண முடியும் ; அமெரிக்க ஹிந்து எம்.பி துளசி கப்பார்ட் பேச்சு.!

உலகம்

பகவத் கீதையில், உறுதி, வலிமை மற்றும் அமைதியை காண முடியும் ; அமெரிக்க ஹிந்து எம்.பி துளசி கப்பார்ட் பேச்சு.!

பகவத் கீதையில், உறுதி, வலிமை மற்றும் அமைதியை காண முடியும் ; அமெரிக்க ஹிந்து எம்.பி துளசி கப்பார்ட்  பேச்சு.!

அமெரிக்காவின் முதல் இந்து பெண் எம்.பி.யான துளசி கப்பார்டின் (வயது 37). பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, அமெரிக்காவுக்கு சொந்தமான சமோயா தீவை சேர்ந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்போது துளசி கப்பார்ட், பகவத் கீதையை சாட்சியாக வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்து வருகிறது. மறுபுறம், அமெரிக்காவில், கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்த போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளனஇந்நிலையில், 7ம் தேதி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், அமெரிக்காவின் முதல் ஹிந்து எம்.பி.,யான துளசி கப்பார்டு, ஹிந்து மாணவர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: இது ஒரு குழப்பமான நேரமாகும். நாளை எப்படி இருக்கும் என, யாராலும் கூற முடியாது. ஆனால், பகவத் கீதையில், கிருஷ்ணர் நமக்கு கற்பித்த பக்தி யோகா மற்றும் கர்ம யோகா நடைமுறை மூலம், உறுதி, வலிமை மற்றும் அமைதியை நம்மால் காண முடியும்.

இந்நேரத்தில், வாழ்க்கையில் நம் நோக்கம் என்ன என்பதை, உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். அது ஒரு ஆழமான கேள்வி.கடவுளுக்கும், கடவுளின் குழந்தைகளுக்கும், சேவை செய்வதே உங்கள் நோக்கம் என்பதை நீங்கள் உணர்ந்துவிட்டால், நீங்கள் உண்மையிலேயே வெற்றிகரமான வாழ்க்கையை வாழ முடியும்.வெற்றி என்பது, ஆபரணங்கள், ஆடம்பர பொருட்கள் அல்லது சாதனைகளால் வரையறுக்கப்படுவதில்லை. சேவையை மையமாகக் கொண்டு அமையும், மகிழ்ச்சியான வாழ்க்கை தான் வெற்றியை தீர்மானிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

முன்னதாக அமெரிக்காவின் முதல் இந்து பெண் எம்.பி.யான துளசி கப்பார்டுக்கு இந்திய வம்சாவளியினர் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. அங்குள்ள முக்கியமான பல மாகாணங்களில் தேர்தல் வெற்றிக்கு இந்தியர்கள் முக்கிய பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.ஜனநாயக கட்சி சார்பில் துளசி கப்பார்ட், வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் முதல் இந்து வேட்பாளர் என்ற பெருமையை இவர் பெறுவார். இதைப்போல அவர் ஜனாதிபதியாக தேர்வானால் அமெரிக்காவின் இளமையான மற்றும் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையும் இவருக்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...