பிரதமர் மோடிக்கு அப்படி என்ன கடிதம் எழுதினர் ஸ்டெர்லைட் நிறுவன தலைவர் அனில் அகர்வால்…?

தமிழகம்

பிரதமர் மோடிக்கு அப்படி என்ன கடிதம் எழுதினர் ஸ்டெர்லைட் நிறுவன தலைவர் அனில் அகர்வால்…?

பிரதமர் மோடிக்கு அப்படி என்ன கடிதம் எழுதினர் ஸ்டெர்லைட் நிறுவன தலைவர் அனில் அகர்வால்…?

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடந்த 4 ஜூன் 2020 என்ற தேதியில் அந்தக் கடிதத்தை அனில் அகர்வால் எழுதி உள்ளார்.

இது குறித்து அனில் அகர்வால் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்:- தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அனல் மின் நிலையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதால், நாட்டிற்கு பல்வேறு வழிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆலை மூடப்பட்டதால், காப்பர் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டதாலும், பல ஆண்டுகளுக்குப் பின்னர், காப்பரை இறக்குமதி செய்யும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாலும், மத்திய, மாநில அரசுகளுக்கு வரி வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அனில் அகர்வால், இது சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் அரசின் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள விலை உயர்ந்த இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமல் துருப்பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்திருப்பதாகவும் கடிதத்தில் அனில் அகர்வால் கூறியுள்ளார்.

20 ஆண்டுகளாக இயங்கிய ஸ்டெர்லைட் ஆலை மற்றும் 7 ஆண்டுகள் இயங்கிய அனல்மின் நிலையத்தில் சிறந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால் அதிக செயல்திறன் கொண்டவையாக இருந்ததென அவர் தெரிவித்தார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார். நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டெர்லைட் நிறுவன தலைவர் அனில் அகர்வால் எழுதியுள்ளார்.

Leave your comments here...