கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை ; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

இந்தியா

கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை ; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை ; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது.கடந்த 24 மணி நேரத்தில் கொடிய வைரஸ் தொற்றால் 10,956 பேர் பாதிப்படைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் இறந்து உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,97,535ஆக உயர்ந்தத.நாட்டில் கொரோனாவிற்கு இதுவரை 8498 பேர் பலியாகியுள்ளனர்என கூறி உள்ளனர்.அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷியாவிற்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் பாதிப்புகளி இந்தியா இப்போது உலகில் நான்காவது இடத்தில் உள்ளது

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சுட்டிக் காட்டியதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லுவ் அகர்வால் தெரிவித்தார்.

சமூக பரவல் நிலை என்பது, பாதிப்புக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களும், தொற்று உள்ள நாடுகளுக்குச் செல்லாதவர்களும், பாதிக்கப்படும் நிலையாகும். பாதிக்கப்பட்ட நபருக்கு, தொற்று எங்கிருந்து உருவானது என்பதையே கண்டறிய முடியாத அபாயமான நிலையாக, இது கூறப்படுகிறது. இருப்பினும் இந்தியாவில் இந்த நிலைக்கு இன்னும் வரவில்லை என்று லுவ் அகர்வால் தெரிவித்தார்.

Leave your comments here...