ஆசியாவிலேயே 2வது பெரிய சிலை உள்ள கிருஷ்ணன் கோவில் : 13 அடி உயரத்தில் அருள்பாலிக்கும் திப்பிறமலை கிருஷ்ணன் கோவில்.!
- June 7, 2020
- jananesan
- : 4318
ஆசியாவில் இரண்டாவது பெரிய கிருஷ்ணர் சிலை அமையபெற்றது கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள திப்பிறமலை ஊரில் உள்ள அருள்மிகு கருமாணிக்கத்தாழ்வார் திருக்கோவில்.
கோவில் வரலாறு:-
அப்போதைய வேணாட்டை ஆண்டு மன்னர் தனது அரண்மனையில் கணக்கர்களாகவும் போர்படையில் வீரர்களாவும் கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்புகளையும் சீரிய முறையில் செய்து வந்த கிருஷ்ணவக சமுதாயத்தினருக்கு (விருஷ்ணி சத்திரியர்கள்) பிடிகள் என்ற பெண் யானைகளின் மூலம் நிலம் அளந்து 72 பிடாகைகள்(கிராமங்கள்) அமைத்து கொடுத்தார். கூடவே அவர்கள் வழிபட ஐந்து கிருஷ்ணர் கோவில்களையும் அமைத்து கொடுத்தார். அதில் ஒன்றுதான் இந்த இந்த திப்பிறமலை கருமாணிக்கத்தாழ்வார் திருக்கோவில். இந்த கோவிலானது பாலகிருஷ்ணன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. திருபிறைமலை என்ற பெயரே நாளடைவில் திப்பிறமலை என்று ஆனதாக அறியபடுகிறது.
இந்த கோவிலானது கேரள பாணியில் சேர கட்டிட கலையை அடிப்படையாக கொண்டு கட்டபட்டிருக்கும். பகவான் கண்ணன் சிறுவயதில் வெண்ணையை திருடி உண்டதை அறிந்த தாய் யசோதா கண்ணனை கண்டித்தார்.அப்போது, கண்ணன், குழந்தையாகவே கையில் வெண்ணையுடன் விஸ்வரூபம் எடுத்து யசோதாவிற்கு காட்சி அளித்தார். அதனை அடிப்படையாகக் கொண்டே இத்தலத்தின் விக்ரகம் அமைக்கப்பட்டுள்ளது.இத்தலத்தில் வீற்றுள்ள கிருஷ்ணர் சிலையானது தென்னிந்தியாவிலேயே பெரிய கிருஷ்ணர் சிலை என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. அதாவது, இங்கே சுமார் 13 அடி உயரத்தில் கிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். நின்ற கோலத்தில் 13அடி உடைய கிருஷ்ணர் சிலையை தென்னிந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது ஆசியாவில் இரண்டாவது பெரிய கிருஷ்ணர் சிலை அமையபெற்றது இந்த கோவிலில் மட்டுமே.
கிருஷ்ணர் நான்கு கைகளோடு கம்பீரமாக காட்சி அளிக்கின்றார். ஒரு கையில் சங்கும் ஒரு கையில் சக்கரமும் மற்றோரு கையில் வெண்ணையும் மற்றும் ஒரு கையில் கதாயுதம் ஏந்தி அருள்பாலிக்கின்றார்.அவரின் வலது பக்கத்தில் கிருஷ்ணர் காலடியில் தாய் யசோதாவின் வலது கையில் வெண்ணையும் இடது கையில் கரண்டியும் உள்ளது.
இவ்வாறு தாய் யசோதா உடன் கிருஷ்ணர் கோவில் கொண்டுள்ளது மிக ஆபூர்வமானதாகும்.திப்பிறமலை கிருஷ்ணர் தானாக வளர்வதாக பக்தர்களால் நம்பப்படகிறது. மேலும், கிருஷ்ணரின் வளர்ச்சிக்கு ஏற்ப இத்தலத்தின் கூறை மூன்று முறை இடித்து உயர்த்தப்பட்டதப்பட்டுள்ளது. தானாக வளர்ந்து கொண்டிருந்த இந்த சிலையை பூஜித்த முனிவர் ஒருவர் பின், அதனைக் கட்டுப்படுத்தியதாகவும் செவி வழி செய்திகள் மூலம் அறியபடுகிறது.
இக்கோவிலில் குழந்தை வரம் இல்லாதோர் இத்தலத்தின் இறைவனை ஜெயந்தி தினத்தில் வழிபட்டு பிரார்த்தனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது தல நம்பிக்கை. பக்தர்கள், வெண்ணை, சீடை, முருக்கு உள்ளிட்டவற்றை படைத்து, நெய்வேத்தியம் ஏற்றினால் பலன் உண்டாகும். மேலும் இக்கோவில் திப்பிறமலையில் சிவன் சுயம்புவாக தோன்றிய கலிகண்ட மகாதேவர் கோயில், அருள்மிகு சாஸ்தா கோயில் ஆகியவை இந்த கிருஷ்ணன் கோவில் அருகே அமைந்துள்ளது. சிவனை வழிபட்டு விட்டு இங்குள்ள 9 கிளைகளுடன் உள்ள அரசமரத்தை வலம் வந்தால் 9 கிரக தோஷங்களும் நீங்கி நிவர்த்தி பெறலாம் என்பது நம்பிக்கை.
இந்த கோவில் தற்போது அறநிலைதுறை கட்டுபாட்டில் உள்ளது .அருகே பகுதியில் உள்ள இந்து மக்களால் பத்துநாள்கள் கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இப்பகுதி மக்களால் மாபெரும் அளவிலான திருவிழா கொண்டாடுவது வழக்கம். புரட்டாசி சனிக்கிழமை, அமாவாசை தினங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கே வருகை தந்து பாலகிருஷ்ணரை வழிபாடுவர்கள். மேலும் இத்தனை சிறப்புகள் மிக்க ஆயிரம் ஆண்டு மேல் பழைமையான இந்த கோவில் உள்ளூர் மாவட்ட பக்தர்களால் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்பது வருத்தமான விஷியமாக உள்ளது.
Gokul Psv
Social Activist
Leave your comments here...