ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும் : தேமுதிக தலைவர் விஜயகாந்த்
- June 6, 2020
- jananesan
- : 1516
- Vijayakanth

ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் , ஆட்டோ, கால் டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு மற்றும் தரச் சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க 10 ஆயிரம் ரூபாய் வரை தாங்கள் செலவு செய்வதாக ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் வேதனை தெரிவிப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு, தரச்சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க ₹10,000 வரை தாங்கள் செலவு செய்வதாக ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
எனவே, ஆந்திராவில் வாகன மித்ரா திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் ரூபாய் வழங்குவது சாத்தியமாகும் போது, (1-2)@CMOTamilNadu pic.twitter.com/lQ9Ni3XVN3— Vijayakant (@iVijayakant) June 6, 2020
மேலும் ஆந்திராவில் வாகன மித்ரா திட்டத்தின் மூலம் ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக சுட்டிகாட்டியுள்ள அவர், தமிழகத்திலும் அதுபோன்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்து, ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
Leave your comments here...