மூக்குத்தி அம்மன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி நடித்தார…?

சினிமா துளிகள்

மூக்குத்தி அம்மன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி நடித்தார…?

மூக்குத்தி அம்மன் படத்தில்  சிறப்பு தோற்றத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி நடித்தார…?

நடிகர் ஆர்ஜே பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து மூக்குத்தியம்மன் திரைப்படத்தை இயக்கியுள்ளனர். மூக்குத்தியம்மன் வேடத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். நகைச்சுவை கலந்த அம்மன் படமாக உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். இந்த படம் முழுக்க மூக்குத்தி அம்மனாக நடிக்கும் நடிகை நயன்தாராவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது கேரளாவில் உள்ள அம்மன் கோயில்கள், தமிழத்தில் கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபட்டார்.


ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தில், நயன்தாராவுடன், நடிகை ஊர்வசி, மௌலி ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கொரோனா பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே நிறைவடைந்துவிட்டது. இந்தப் படத்தை மே 1-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், பொது முடக்கத்தால் திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை.


இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தின் ஃபர்ஸ் அண்ட் செகண்ட் லுக் போஸ்டர்களும் மூக்குத்தி அம்மன் படத்தின் புகைப்படங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நயன்தாராவின் மூக்குத்தியம்மன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.இந்த படத்திற்கு கதை திரைகதை வசனம் எழுதி இணைந்து இயக்கியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.


இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. செல்லாத்தா, மாரியாம்மா எங்கள் மாரியம்மா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் அம்மன் பாடல்களை பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி. இவர் முக்குத்தி அம்மன் படத்தில் இடம்பெற்றுள்ள மூக்குத்தி அம்மனுக்கு பொங்கல் வைப்போம் எனும் பாடலையும் பாடியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது

Leave your comments here...